பவானி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் எரியூட்டப்படும் குப்பை கழிவுகளால் பவானி - குமாரபாளையம் செல்லும் புதிய பாலம் , பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள மக்கள் புகையால் பாதிக்கப்படுகின்றனர் . பேருந்து நிலையம் அருகிலேயே மருத்துவமனைகளும் உள்ளதால் நோயாளிகளும் பொதுமக்களும சுவாச பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர் . எனவே , நகராட்சி நிர்வாகம் இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment