புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பெருமாள் கோயிலில் வழிபாடு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 September 2024

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பெருமாள் கோயிலில் வழிபாடு :


புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையொட்டி ஈரோட்டில் ரங்கநாதர் கோயிலில் ஏராளமான வைணவ பக்தர்கள் ரங்கநாதரை கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி வழிபாடு செய்தனர் . புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களில் சிறப்பு வழிபாடு சய்வது வழக்கம் . இதனை தொடர்ந்து புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று ( செப் .21 ) தமிழகத்தில் உள்ள முக்கிய வைணவ கோயில்களில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன . இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பழமையான ரங்கநாதர் கோயிலில் ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்தும் , சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment