ஈரோடு ராஜகணபதி கோயிலில் நாளை மறுநாள் ( 15 ம் தேதி ) மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது . ஈரோடு இடையன்காட்டு வலசில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது . இக்கோவில் வளாகத்தில் , ஞானப் பிரசன்னாம்பிகா , உடனமர் , காளஹஸ்தீஸ்வரர் , வேம்பரசு செல்வவிநாயகர் ஆகிய சன்னதி உள்ளது . இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் ( 15 ம் தேதி ) நடக்கிறது . இதனையொட்டி , நாளை ( 14 ம் தேதி ) , விக்னேஷ்வர பூஜை , பரிவார மூர்த்திகளுக்கு மூலமந்திரம் , மாலா மந்திர ஹோமம் , திரவியாஹிதி , வேதபாராயணம் , திருமுறை விண்ணப்பம் , ஐந்தாம் கால யாக வேள்வி நடக்கிறது . விழாவின் முக்கிய நிகழ்வான நாளை மறுநாள் ( 15 ம் தேதி ) , மங்கள இசை , கணபதி அதர்வஷிரிஷ உபநிஷத் , கணபதி மூலமந்திர ஹோமம் , நாடி சந்தானம் , யாத்ராதானம் நடக்கிறது . பின்னர் , காலை 8 : 30 மணிக்கு , ராஜகணபதி , ஞானப் பிரசன்னாம்பிகா , உடனமர் , காளஹஸ்தீஸ்வரருக்கு , மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது . தொடர்ந்து , சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவ வைபவாங்கம் நடக்கிறது . பின்னர் அன்னதானம் நடக்கிறது . விழாவிற்கான ஏற்பாடுகளை , ராஜகணபதி கோயில் கும்பாபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மேற்கொள்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment