ஈரோடு சிஎன்சி கல்லூரி வளாகப் பகுதிகளில் சுற்றி திரிந்த 8 அடி நீளம்கொண்ட மஞ்சள் சாரை பாம்பு , 9 அடி நீள கருப்பு சாரை பாம்பு ஆகியவை பிடிபட்டன . மேலும் திண்டல் வித்யா நகர் பகுதியில் உள்ள மகேஷ் குமார் என்பவரின் வீட்டில் புகுந்த 3 அடி நீள மஞ்ச சாரைப்பாம்பு பிடிபட்டது . மேலும் எஸ்பி அலுவலக வளாக பகுதிகளிலும் பாம்புகள் இருப்பதாக வந்த தகவலையடுத்து பாம்பு பிடிக்கும் நிபுணர் பாம்பு யுவராஜ் அந்தப் பாம்புகளை பிடித்தார் . இது பற்றி அவர் கூறியதாவது தற்போது வெயில் காலம் அதிகரித்து வருகிறது .
இந்த காலகட்டங்களில் பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் காலமாக கருதப்படுகிறது . இதனால் பொதுமக்கள் மாட்டுத் தொழுகை , செடி கொடிகள் உள்ள பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்றார் . மேலும் பிடிப்பட்ட பாம்புகளை சூளை ரோஜா நகர் பகுதியில் உள்ள வனசரக அலுவலகத்தில் பாம்பு யுவராஜ் ஒப்படைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment