ஈரோடு நகரில் கனகர வாகனங்கள் நுழைய அதிரடி தடை ! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 September 2024

ஈரோடு நகரில் கனகர வாகனங்கள் நுழைய அதிரடி தடை !


ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக காலை , மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . ஈரோடு நகரில் இருந்து சேலம் , நாமக்கல் , கரூர் , திருச்சி , கோவை , திருப்பூர் , நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் சாலையில் காலை முதல் மாலை வரை வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது . மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஈரோடு நகர் மையப்பகுதி வழியாக கனகர வாகனங்கள் வந்து செல்வதால் ஈரோடு நகரில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக காலை , மாலையில் வேலைக்கு செல்வோரும் , பள்ளி , கல்லூரி செல்லும் மாணவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் . இதனை தடுக்கும் வகையில் கனரக வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நகரில் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாக நகர பகுதிக்குள் வந்தால் அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல் துறையின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment