ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஈரோடு ஹோப் லைப் பவுண்டேஷன் குடி போதை நீக்கு சிகிச்சை & மறுவாழ்வு மையத்தில் அடிப்படை மக்கள் உரிமைகள் குரல் அனைத்திந்திய தலைமை இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடி மற்றும் போதையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களின் மறுவாழ்விற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் இல்ல வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு வழங்கிய ஆலோசனைகளை மனதார ஏற்றுக்கொண்டு கண்ணீர் மல்க இனிவரும் காலங்களில் போதை மற்றும் குடி பழக்கங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் ஈரோடு ஹோப் லைப் பவுண்டேஷனை மிக சிறப்பாக நடத்தி வரும் அதன் நிறுவனர் எஸ்.ராஜா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து விருது, மற்றும் பாராட்டு பத்திரத்தை டாக்டர் பாலசுப்பிரமணியன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஈரோடு ஹோப் லைப் பவுண்டேஷன் நிர்வாகிகள், யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளை நிறுவனர் ஆர் சங்கர், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு விருது பெற்ற ராஜா அவர்களை வாழ்த்தினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன்.
No comments:
Post a Comment