ஈரோடு மாவட்டம் நாத கவுண்டம்பாளையம் கருணாலயா குழந்தைகள் இல்லத்தில் காங்கேயம் S. தங்கராஜ் அவர்களின் நினைவு தினத்தை போற்றும் வகையில் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உணவு அளிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அடிப்படை மக்கள் உரிமைகள் குரல் இயக்குனர், தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் மேற்கு மண்டல தலைவர் Dr. பாலசுப்பிரமணியம்,
ஈரோடு ஹோப் லைப் பவுண்டேஷன் குடி மற்றும் போதை மன நல சிகிச்சை மறுவாழ்வு மைய நிறுவனர் ராஜா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
S. தங்கராஜ் குடும்பத்தினர், யாதுமாகி அறக்கட்டளை நிறுவனர், தமிழ்நாடு ஊடக மக்கள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் R. சங்கர், கருணை இல்லம் நிறுவனர் ஆறுமுகம், மற்றும் இல்லத்தின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்பு குழந்தைகளுக்கு தங்கராஜ் குடும்பத்தினர் உணவுகள் மட்டும் இனிப்புகள் வழங்கினார்கள்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக
பூபாலன்....
No comments:
Post a Comment