தாளவாடி : வனத்துறையினரை விரட்டிய ஒற்றை காட்டு யானை : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 September 2024

தாளவாடி : வனத்துறையினரை விரட்டிய ஒற்றை காட்டு யானை :


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன . இந்த வனச்சரகத்தில் யானை சிறுத்தை , புலி , கரடி , செந்நாய் , மான் , போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றது . இந்நிலையில் நேற்று ( செப் .19 ) மதியம் தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் சாலை கும்டாபுரம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையில் உலா வந்தது . பின்னர் சாலையில் சிதறிக்கிடந்த கரும்புகளை சுவைத்தது . சிறிது நேரம் அங்குமிங்கும் உலா வந்தது . இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இதுபற்றி வாகன ஓட்டிகள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர் . சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் சாலையில் உலா வந்த ஒற்றை யானையை விரட்ட முயற்சி செய்தனர் . ஆனால் அந்த ஒற்றைக் காட்டு யானை வனப்பகுதிகள் செல்லாமல் வன ஊழியர்களை விரட்டியது . இதில் அதிர்ஷ்டவசமாக வன ஊழியர்கள் உயிர்தப்பினர் . கோபமடைந்த ஒற்றைக் காட்டு யானை துதிக்கையால் சாலையில் இருந்த மண்ணை தன் மீது வீசி ஆத்திரத்தை வெளிப்படுத்தியது . சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக சாலையில் உலா வந்த யானை பின்னர் தானாக வனப்பகுதிகுள் சென்றது . கடந்த சில நாட்களாக இந்த ஒற்றைக்காட்டு யானை சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment