ஈரோட்டில் ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் ஆகியோர்கள் இணைந்து வருடா வருடம் பழனி பாதயாத்திரை செல்லும் முருகன் பக்தர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக சிரமப்படுபவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை இடைவிடாது செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஈரோட்டில் வசித்து வரும் தினக்கூலி வேலை செய்து வரும் பிரபு சுமதி தம்பதியினரின் 6 வயது மகன் சாய் லிங்கேஷ் மூளையில் கட்டி ஏற்பட்டு மருத்துவ செலவிற்காக சிரமப்பட்டு வருவதை அறிந்த நண்பர்கள் ஒரே நாளில் ரூபாய். 32 ஆயிரம் வசூல் செய்து வசூல் செய்த பணத்தை காசோலையாக வழங்கினார்கள்.
இந்த நல சங்கத்தில்
100க்கும் மேற்பட்ட நண்பர்கள் இணைந்து இதுவரைக்கும் 20 நபர்களுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்
No comments:
Post a Comment