கோவை மண்டல அளவிலான முதல்வர் கோப்பைக்கான போட்டி : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 September 2024

கோவை மண்டல அளவிலான முதல்வர் கோப்பைக்கான போட்டி :


கோவை மண்டல அளவிலான முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் , கடந்த 15 ம் தேதி தொடங்கியது . இதில் , ஈரோடு , சேலம் , நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த , பள்ளி , கல்லூரி விளையாட்டு வீரர்- , வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் , பள்ளி மாணவ , மாணவிக களுக்கான கடற்கரை வாலிபால் போட்டி இன்றும் ( 17 ம் தேதி ) , கல்லூரி மாணவ , மாணவிகளுக்கான கடற்கரை வாலிபால் போட்டி நாளையும் ( 18 ம் தேதி ) , நாமக்கல் பாண்டமங்கலம் ஆர் . என் . ஆக்ஸ்போர்ட் பள்ளியில் நடக்கிறது . பள்ளி மாணவ , மாணவிகளுக்கான பளு தூக்குதல் போட்டி நாளை மறுநாளும் ( 19 ம் தேதி ) , கல்லூரி மாணவ , மாணவிகளுக்கான பளு தூக்குதல் போட்டி வரும் 20 ம் தேதியும் நடக்கிறது . இப்போட்டி , ஈரோடு ரங்கம்பாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கிறது . பள்ளி மாணவர்கள் , மாணவிகளுக்கான ஜூடோ மற்றும் குத்துச்சண்டை போட்டி 21 ம் தேதியும் , கல்லூரி மாணவ , மாணவிகளுக்கான ஜூடோ மற்றும் குத்துச்சண்டை போட்டி 22 ம் தேதியும் நடக்கிறது . இது சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நடக்கிறது . இதில் பங்கேற்க உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவிகள் , பள்ளி , கல்லூரிகளிலிருந்து பெற்ற சான்று , ஆதார் அட்டை நகல் , வங்கிக்கணக்கு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் . இவ்வாறு கோவை மண்டல முதுநிலை மேலாளர் அருணா தெரிவித்துள்ளார் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment