ஈரோட்டில் ஓம்சக்தி கோயிலில் தடுப்பு ... பெண்கள் திடீர் போராட்டம் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 September 2024

ஈரோட்டில் ஓம்சக்தி கோயிலில் தடுப்பு ... பெண்கள் திடீர் போராட்டம் :


ஈரோட்டில் ஓம்சக்தியை வழிபட விடக்கோரி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ஈரோடு பெரியார் நகரில் 100 ஆண்டுகள் பழமையான கருப்பண்ண சுவாமி கோயில் உள்ளது . இக்கோயில் வளாகத்திலேயே ஓம்சக்தி கோவில் உள்ளது . இக்கோயிலில் , ஆதிபராசக்தி வழிப்பாட்டு மன்றம் சார்பில் , தினசரி பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது . கருப்பண்ணசுவாமி கோயிலில் கும்பாபிஷேக நடத்துவதற்காக , தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது . இதற்காக , அறநிலையத்துறை மற்றும் அக்கோயிலின் விழாக்குழுவினர் தரப்பில் , கோயிலுக்கு செல்ல முடியாதபடி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக , ஓம்சக்தி கோயிலுக்கு வழிபட வரும் பெண்கள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளதால் , தங்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் , எஸ்.பி. , மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஆதிபராசக்தி வழிப்பாட்டு மன்றம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக , அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் , அதிருப்தியடைந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் , கருப்பண்ணசுவாமி கோயில் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது , கோயில் விழாக்குழுவினர் , பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . தொடர்ந்து , நாங்கள் திரும்ப வருவோம் என கூறியபடி பெண்கள் கலைந்து சென்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment