நம்பியூரில் அரசுப் பள்ளி அருகே தனியார் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தனியார் மதுபானக்கடை அமைப்பதற்கான அனுமதி பபெற்று அதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளி அருகே செயல்பட்டு வந்த அரசு மதுபானக்கடையை பொதுமக்களின் போராட்டம் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது . இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் தனியார் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நம்பியூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் தலைமை வகித்தார் . இதில் , திராவிடர் கழக மாவட்ட தலைவர் சென்னியப்பன் , ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தனியார் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment