ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும் . இந்த திம்பம் மலைப்பாதையில் 16.200 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி உள்ளபோது தினந்தோறும் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது . வாகனங்கள் அனைத்தும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நிற்கிறது . இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர் . ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment