மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 September 2024

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி :



அந்தியூர் அருகே அத்தாணி -சத்தி ரோட்டில் கோழிக்கடை பகுதியில் நேற்று முன்தினம் ( செப் .20 ) பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது . இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த பெண் படுகாயம் அடைந்தார் . இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் . ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் நேற்று ( செப் .21 ) காலை பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சிவசாமி என்பவருடைய மனைவி தமிழரசி ( வயது 60 ) என்பதும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் திண்டுக்கலில் இருந்து இங்கு வந்து சுற்றித்திரிந்தபோது வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தும் தெரியவந்தது . மேலும் விபத்து ஏற்படுத்தியதாக சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி ( வயது 34 ) என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment