ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் மோட்டார் வாகனங்களில் கொண்டு வந்த பொருட்களை ஏற்றி இறக்கினர் . அப்போது சுமைத்துக்கும் தொழிலாளர்கள் நாங்கள்தான் இறக்குவோம் என்றனர் . அதற்கு மாட்டுவண்டி தொழிலாளர்கள் எங்களுக்கு ஆர்டர் காப்பி உள்ளது . நாங்கள் தான் இறக்குவோம் என்றனர் . இதனால் இருதரப்பு கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது . இதனால் ஆத்திரமடைந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் மாட்டு வண்டியை பார்க் ரோட்டில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் . பின்னர் மாடு வண்டிகளை ஓரமாக நிறுத்தினர் . தொடர்ந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது . இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment