ஒரே நாடு ; ஒரே தேர்தல் திட்டத்தில் வி . சி . க . , வுக்கு உடன்பாடில்லை " : திருமாவளவன் பேட்டி ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் . திருமாவளவன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில் , ' ' மத்திய அரசின் ' ஒரே நாடு ஒரே தேர்தல் ' கொள்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உடன்பாடு இல்லை . இத்திட்டம் ஏதோ உள் நோக்கத்தோடு கொண்டு வரப்படுவதாக ஐயப்படுகிறோம் . அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுத்தது விடும் என்ற அச்சம் ஏற்படுகிறது . ஒருமித்த கருத்து உள்ள இயக்கங்களோடு இணைந்து இந்த ' ஒரே நாடு ஒரே தேர்தல் ' திட்டத்திற்கு எதிராக மேலும் வலுவாக குரல் கொடுப்போம் " என்றார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment