காரை விற்று போலி சாவி மூலம் திருடிய புரோக்கர் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 September 2024

காரை விற்று போலி சாவி மூலம் திருடிய புரோக்கர் :




ஈரோடு மாவட்டம் அந்தியூர் பி பிளாக் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சபி ( வயது 38 ) . இவர் அண்ணாமடுவில் இரும்பு மற்றும் ரோலிங் சாட்டர் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார் . இவர் பைனான்ஸ் மூலம் வாங்கிய காரை கடையின் முன்பு கடந்த 12 ம் தேதி இரவு நிறுத்தி வைத்திருந்தார் . 13 ஆம் தேதி காலை சென்று பார்த்தபோது அந்த கார் காணாமல் போனது . இதன் மதிப்பு 5 இலட்சம் ஆகும் . பின்னர் இதுகுறித்து அவர் அந்தியூர் போலீசில் புகார் செய்தார் . தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர் . இந்நிலையில் , பவானி கோட்டம் குற்றப்பிரிவு போலீசார் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பக புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது , அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர் . இதனால் இருவரையும் பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர் . பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் குந்துபாயூரைச் சேர்ந்த காதர் பாஷா ( வயது 40 ) , நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டை சேர்ந்த ரசித் ( 29 ) ஆகியோர் என்பது தெரியவந்தது . மேலும் இதில் கதிர் பாட்ஷா கார் புரோக்கராக செயல்பட்டதும் , போலி சாவி மூலம் காரை திருடியதும் தெரியவந்தது . இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment