ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் கோபிசெட்டிபாளையம் ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் செந்தில்நாதன் தலைமையில் , வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு . முத்துசாமி , மாவட்ட செயலாளர் என . நல்லசிவம் ஆகியோர் பொது உறுப்பினர் கூட்டத்தில் மக்கள் குறைகளைக் கேட்டு ஆலோசனை வழங்கினார்கள் . நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் , மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் , வார்டு கழக பிரதிநிதிகள் , சார்பு அணிகளின் நிர்வாகிகள் , தொமுச நிர்வாகிகள் , சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் கழக உடன் பிறப்புகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment