முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை வீட்டு வசதி , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு . முத்துசாமி , ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார் . இதைத் தொடர்ந்து , அவர் பேசியதாவது : செப்டம்பர் 24 - ஆம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டிகளில் பங்கேற்க , தமிழகம் முழுவதும் 11,56,566 விளையாட்டு வீரர் , வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர் . ஈரோடு மாவட்டத்தில் 21,626 பேர் பதிவு செய்துள்ளனர் . பள்ளி , கல்லூரி , பொதுமக்கள் , அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன . தடகளம் , கூடைப்பந்து , பூப்பந்து , கிரிக்கெட் , கால்பந்து , வளைகோல்பந்து , கபடி , சிலம்பம் , நீச்சல் , மேஜைப்பந்து , கையுந்துபந்து , வாலிபால் , கேரம் , செஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன . மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் , வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ .3,000 , இரண்டாம் பரிசாக ரூ .2,000 , மூன்றாம் பரிசாக ரூ .1,000 வழங்கப்படவுள்ளது . மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர் , வீராங்கனைகள் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மாநில அளவில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வர் . மாநில அளவிலான போட்டிகள் சென்னை , மதுரை , திருச்சி , கோவை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment