கோபி : நகை வாங்குவது போல் நடித்து மோதிரங்களை திருடிய பெண் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 September 2024

கோபி : நகை வாங்குவது போல் நடித்து மோதிரங்களை திருடிய பெண் :



கோபி கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நேற்று ( செப் .20 ) சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர் வந்தார் . பின்னர் அவர் தங்க மோதிரங்கள் வாங்க வேண்டும் என அங்கு பணியில் இருந்த ஊழியர் நிஷா என்பவரிடம் கூறியுள்ளார் . அதைத்தொடர்ந்து அவர் தங்க மோதிரங்களை காண்பித்துள்ளார் . ஆனால் அவை பிடிக்கவிலலை எனக் கூறி அந்தப் பெண் அங்கிருந்து சென்றுவிட்டார் . அதன்பின்னர் அங்கிருந்த நகைகளை ஊழியர் சரிபார்த்தபோது 3 கிராம் எடையுள்ள இரண்டு தங்க மோதிரங்கள் திருட்டு போனது தெரியவந்தது . நகை வாங்குவது போல் நடித்துப் பெண் தங்க மோதிரங்களை திருடிச் சென்றது தெரியவந்தது . இதுகுறித்து நிஷா கோபி போலீசில் புகார் செய்தார் . அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment