ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன . யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீருக்காக வனச்சாலையை கடந்து செல்வது வழக்கம் . சில நேரங்களில் யானைகள் சாலையோரமாக உள்ள செடி , கொடி வகைகளை தின்றபடி அங்கேயே நடமாடும சமீப காலமாக ஒன்றை யானை தாளவாடி அருகே முகாமிட்டு அந்த வழியாக வரும் வாகனங்களில் ஏதாவது உள்ளதா எனத் தேடி வந்தது . இந்நிலையில் தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் ரோட்டில் கும்டாபுரம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையில் உலா வந்தது . அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி கரும்பு உள்ளதா என தேடுவது தொடர்கதையாக மாறிவிட்டது . இதைக் கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை சற்று தூரத்திலேயே நிறுத்திக் கொண்டனர் . கடந்த சில நாட்களாக கும்டாபுரம் சாலையில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்களும் , வாகன ஒட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment