ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன . இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் , காலி இடங்களுக்கு சொத்து வரியும் , குடிநீர் வரி , தொழில் வரி மற்றும் மாநகராட்சி குத்தகை இனங்களுக்கான அனுமதிப்பதற்கான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது . இதில் , மாநகராட்சிக்கு சொத்து வரி , குடிநீர் வரி , தொழில் வரி போன்றவை பிரதான வரி வருவாயாகும் . இந்த வரியினங்கள் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை முதல் தவணையிலும் , அக்டோபர் முதல் மார்ச் வரை 2 வது தவணையிலும் செலுத்த வேண்டும் . தற்போது , வரி நிலுவை தொகைகளை வசூலிக்க மாநகராட்சி மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இந்நிலையில் , வரி வசூலிப்பது தொடர்பான ஆலோசனை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் மனிஷ் தலைமையில் நடந்தது . வருவாய் பிரிவு உதவி ஆணையர் அண்ணாத்துரை முன்னிலை வகித்தார் . இதில் , வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வசூலிக்கவும் , நீண்ட காலமாக வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு முதற்கட்டமாக குடிநீர் இணைப்புகள் துண்டிக்கவும் , அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜப்தி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது . இதுதொடர்பாக வரி செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு மாநகராட்சி வாகனங்கள் ஒலி பெருக்கி மூலம் வாசகங்கள் ஒலிக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment