ஈரோட்டில் பிளாஸ்டிக் விற்பனையை தடுக்க விழிப்புணர்வு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

tamilaga%20kural

Saturday, 21 September 2024

ஈரோட்டில் பிளாஸ்டிக் விற்பனையை தடுக்க விழிப்புணர்வு :

IMG-20240920-WA0007

ஈரோட்டில் சுற்றுச்சூழல் , நிலத்தடி நீர் ஆதாரப் பாதுகாப்பு போன்றவற்றின் அவசியம் கருதி , வணிகர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனையை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது . பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்ற தலைப்பதில் ஈரோடு மாநகராட்சி சார்பில் , மாநகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்றுநேற்று ( செப் .19 ) நடந்தது . இதில் , உணவு பேக்கிங் செய்வதற்கான பிளாஸ்டிக் ஷீட்டுகள் , பிலிம் ஒட்டிய ஷீட்டுகள் , பிளாஸ்டிக் தெர்மோகோல் தட்டுகள் , முலாம் பூசப்பட்ட பேப்பர் தட்டுகள் , பிளாஸ்டிக் டீக்கப்புகள் , டம்ளர்கள் , தண்ணீர் பாக்கெட்டுகள் , கேரி பேக்குகள் உள்ளிட்டவைகளை தவிர்த்து , வாழை இலை , பாக்கு மர இலை , கண்ணாடி மற்றும் உலோக டம்ளர்களை பயன்படுத்த வேண்டும் என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரச்சுரங்கள் , பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது . மேலும் , சுற்றுச்சூழல் , நிலத்தடி நீர் ஆதாரப் பாதுகாப்பு போன்றவற்றின் அவசியம் கருதி , வணிகர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனையை தவிர்த்து , வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment