பவானியில் பள்ளி மாணவர்களின் காலை உணவை சுவைத்த கலெக்டர் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 September 2024

பவானியில் பள்ளி மாணவர்களின் காலை உணவை சுவைத்த கலெக்டர் :



உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் , பவானி நகராட்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் , ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் , கிராம நிர்வாக அலுவலகம் , நியாய விலைக்கடை , அங்கன்வாடி மையம் , உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் நேற்று ( செப் .19 ) சுன்கரா ஆய்வு மேற்கொண்டார் . மேலும் , அனைத்துத் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு , பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார் . அதனைத் தொடர்ந்து , இரண்டாம் நாளான பவானி நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் வீதியில் உள்ள பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட காலை உணவினை சுவைத்து பார்த்து , ஆய்வு மேற்கொண்டார் . தொடர்ந்து , பவானி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் பயணியர் பயன்படுத்தும் கழிவறை ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு , ஆய்வு மேற்கொண்டார் . மேலும் , பவானி நகராட்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் சேகரிக்கப்பட்டு , உரம் தயாரிக்கும் பணியினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment