ஈரோடு மாவட்டம் கணபதி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சிறப்புமுகாம் சாணார்பாளையத்தில் நடைபெற்றது. சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள், போதை தவறான பாதை, குடித்தால் மரணம் நிச்சயம்,
புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு தரும், போன்ற பதாகையை ஏந்தி ஊர்வலமாக கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வரை வந்தனர். சிறப்பு விருந்தினராக மலையம்பாளையம் காவல் ஆய்வாளர், புஞ்சை காளமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர், கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சர்மிளா, மலையம்பாளையம் காவல் அதிகாரிகள், ஆசிரியர், ஆசிரியைகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன்
No comments:
Post a Comment