ஈரோடு வ.உ. சி. பூங்காவில் கல்லூரி மாணவ, மாணவியர் தூய்மைப் பணி : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 1 October 2024

ஈரோடு வ.உ. சி. பூங்காவில் கல்லூரி மாணவ, மாணவியர் தூய்மைப் பணி :


மத்திய அரசின் சார்பில் துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை என்ற பணி கடந்த 17ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆங்காங்கே தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர. அதன் ஒரு பகுதியாக தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணிக் காப்பது அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரியின் சார்பில், ஈரோடு வஉசி பூங்காவில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பூங்காவில் இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை படுத்தினர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment