ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான கருங்கல்பாளையம் வரதப்பா நகரில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான அட்டை குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு மறுசுழற்சிக்காக பேப்பர் அட்டைகள், புத்தகங்கள், பேப்பர், போன்ற பொருள்கள் குடோனில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குடோனில் திடீரென ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் வைக்கப்பட்டிருந்த அட்டைகளிலும், பேப்பர்களிலும் தீ படித்துள்ளது. பின்பு ஆயில் அட்டைகள் போன்றவை அதில் இருந்ததால் தீ மளமளவென பரவத் தொடங்கி குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. குடோனில் ஏற்பட்ட தீவிபத்தால் அக்கம்பக்கத்தினர் பதறி அடித்துக் கொண்டு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் தீயை அனைத்தனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய்
மதிப்பிலான பேப்பர் அட்டைகள்,புத்தகங்கள் போன்ற பொருள்கள் தீயில் எறிந்து சேதமடைந்தது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment