கடைசி முகூர்த்தம் ... ஈரோடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 September 2024

கடைசி முகூர்த்தம் ... ஈரோடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு



ஈரோடு பஸ் நிலைய பகுதியில் உள்ள மொத்த பூக்கடைகளுக்கு சேலம் , தர்மபுரி , கிருஷ்ணகிரி , ஓசூர் , சத்தியமங்கலம் , தாளவாடி மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது . இங்கிருந்து சிறிய நகரங்களுக்கும் , பெரிய நகரங்களுக்கும் விற்பனைக்கு பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது . முகூர்த்த நாட்களில் பூக்களின் தேவை அதிகரித்து அதன் விலையும் உயர்ந்து வருவது வழக்கம் . இதேபோல் விசேஷ நாட்களிலும் பூக்கள் விலை உயர்ந்து விடும் . தற்போது ஆவணி மாச கடைசி முகூர்த்த தினம் இன்றும் நாளையும் உள்ளது . இதனால் பூக்களின் தேவை அதிகரித்து பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது . 


ஈரோடு பஸ் நிலைய பகுதி கடைகளில் பூக்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ ரூ . 400 க்கு விற்ற நிலையில் தற்போது ஒரு கிலோ மல்லிகை பூ ரூ . 800 - க்கு விற்கப்படுகிறது . இதேபோல் முல்லை கிலோ ரூ . 1000 - க்கும் , சம்மங்கி ரூ . 20 , ரோஜா ரூ . 240 , அரளி 60 ரூபாய்க்கும் , செவ்வந்தி 160 ரூபாய்க்கும் , ஜாதி மல்லி 400 ரூபாய்க்கும் , ரோஜா கட்டு 300 ரூபாய்க்கும் , கோழி கொண்டை பூ 80 ரூபாய்க்கும் விற்பனையானது . ஜாதிப்பூ , செவ்வந்தி பூ குறைவாகவே வரத்தானதாக வியாபாரிகள் தெரிவித்தனர் . 


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment