ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 September 2024

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா :


ஈரோட்டில் சிறப்பு வாய்ந்த வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் . ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது . இந்தக் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் அருகே யாகசாலைகள் அமைக்கப்பட்டு கணபதி பூஜை , மகா சங்கல்பம் , முளைப்பாரி இடுதல் ஆகியவை விமர்சியாக நடைபெற்றன . இதைத்தொடர்ந்து கடந்த வியாழக்கிழமையன்று மங்கள இசையுடன் கணபதி ஹோமம் , தனபூஜை , லட்சுமி ஹோமம் , மூர்த்தி ஹோமம் , பூர்ணாகுதி , தீபாராதனை ஆகியவை நடந்தது . இதன் தொடர்ச்சியாக காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்து , வழிபட்டனர் .


 அதைத்தொடர்ந்து முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . நான்கு காளைகள் மற்றும் இரண்டு குதிரைகள் ஊர்வலத்தில் முன் சென்றன . மேள , தாளங்கள் மற்றும் இசைக்கருவிகள் ஒலிக்க கோயிலில் இருந்து பெண்கள் முளைப்பாரியை எடுத்து ஊர்வலமாக சென்றனர் . இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் ஈரோடு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீரை தெளித்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த மாரியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment