பவானி அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 September 2024

பவானி அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு :


பவானி அருகே தோட்டத்துக்குச்சென்றபோது பாம்பு கடித்ததில் விவசாயி உயிரிழந்தார் . பவானியை அடுத்த ஜம்பை , கருக்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் விசுவநாதன் ( 55 ) , விவசாயி . இவர் , தனது வாழைத் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார் . அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அவரைப் பாம்பு கடித்துள்ளது . இதைக் கண்ட உறவினர்கள் விசுவநாதனை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . பரிசோதனையில் வரும் வழியிலேயே விசுவநாதன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் . இதுகுறித்து , பவானி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment