ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் சாலையில் கடந்த சில வாரங்களாக கரும்பு லாரிகள் மற்றும் வாகனங்களை வழிமறித்து வந்த ஒற்றைக் காட்டுயானை , நேற்று ( செப் .21 ) இரவு திடீரென கும்டாபுரம் ஊருக்குள் நுழைந்து ஸ்ரீ பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை அலுவலகம் அருகே கரும்பு லாரிகளை தேடியவாறு அலைமோதியது . இதைக்கண்டு அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்களக் சுமார் 2 மணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர் . அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும்முன் தாளவாடி பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றைக் காட்டுயானையை பிடித்து வேறு பகுதிக்கு மாற்ற வேண்டுமென வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment