ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி மாடங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி . இவருடைய மகன் சிவக்குமார் ( வயது 24 ) இவர் வேம்பத்தி பகுதியைச் சேர்ந்த அந்தியூரில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் படித்து வரும் 17 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி காதலித்துள்ளார் . இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை அவர் கடத்திச் சென்று விட்டதாக பெண்ணின் பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் . அதன் அடிப்படையில் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர் . இதனிடையே மாணவியும் , வாலிபரும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் ஓர் இடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது . அங்கு சென்று மாணவியை மீட்டதுடன் சிவகுமாரை போலீசார் கைது செய்தனர் . பின்னர் சிவகுமாரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment