கீழ் பவானி கால்வாயில் தண்ணீர் திருட்டு - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 September 2024

கீழ் பவானி கால்வாயில் தண்ணீர் திருட்டு



கோபி அருகே கீழ்பவானி கால்வாயில் சட்டத்துக்கு புறம்பான வகையில் தண்ணீர் திருடப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததோடு , எச்சரிக்கை விடுத்துள்ளனர் . ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான திட்ட கால்வாயில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு கால்வாயில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது . இந்நிலையில் , கால்வாயில் திடீரென தண்ணீர் குறைவது கண்டறியப்பட்டது . இதனையடுத்து , உயர் அலுவலர்களின் அறிவுரையின்படி , இரவு நேர ஆய்வு பணிகளை உதவிப் பொறியாளர்கள் செந்தில்குமார் ( கவுந்தப்பாடி ) , தினேஷ் குமார் ( கோபிசெட்டிபாளையம் ) ஆகியோர் களப்பணியாளர்களுடன் மேற்கொண்டனர் . அதன்படி , நேற்று ( 21 ம் தேதி ) இரவு 10 மணி முதல் இன்று ( 22 ம் தேதி ) மதியம் 1. 30 மணி வரை கால்வாயில் ஆய்வு மேற்கொண்டனர் .


 இந்த ஆய்வின்போது , கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளாங்கோவில் கிராமம் அருகில் மழை நீர் வடிகால் குகை வழி பாதையில் சட்டத்துக்கு புறம்பாக விவசாயிகள் கால்வாயில் உள்ள தண்ணீரை பிவிசி குழாய்கள் மூலம் உறிஞ்சி எடுத்துச் செல்வது கண்டறிந்தனர் . அதனைத் தொடர்ந்து , பிவிசி குழாய்கள் முழுவதும் அகற்றி , அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர் . மேலும் , இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால் , சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment