ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், நஞ்சை காளமங்கலம் கிராமம், மன்னாதம்பாளையம் காளமங்கலம் அருள்மிகு ஸ்ரீ குலவிளக்கு அம்மன் ஆலயத்தில் மொடக்குறிச்சி அனுசியா தரணிபதி அவர்களின் சிரகிரி வேலவா கலைக்குழுவினரின் 6 வது வள்ளி கும்மி அரங்கேற்ற விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
அரங்கேற்ற விழா நிகழ்ச்சியில் வள்ளி கும்மி நடனம், கட்டைக்கால் ஆட்டம், சலங்கை ஆட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
இதற்கு முன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நிகழ்ச்சியானது கணபதிபாளையம், சோளங்காபாளையம், மொடக்குறிச்சி, லிங்ககவுண்டன்வலசு, பொரியூர் மற்றும் 6 வது அரங்கேற்றமாக பச்சாம்பாளையம் கலைஞர்களின் அரங்கேற்ற விழா குலவிளக்கு அம்மன் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
அரங்கேற்ற விழா நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக சிரகிரி வேலவா கலைக்குழுவின் இணையதள வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
தமிழரின் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் வள்ளி கும்மி நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்...
செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்
No comments:
Post a Comment