ஈரோட்டில் தூய்மை இந்தியா திட்டம்- களம் இறங்கிய ரத்னா ரெசிடென்சி - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 October 2024

ஈரோட்டில் தூய்மை இந்தியா திட்டம்- களம் இறங்கிய ரத்னா ரெசிடென்சி



இந்திய நாடு முழுவதும்  "அக்டோபர் 2 தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி தூய்மையை வலியுறுத்தி காந்தியடிகளுக்கு நாம் தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும். இதன்படி நாடு முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கம் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்" என்று சென்ற வருடம் அழைப்பு  விடுத்திருந்தார். 


அதன் அடிப்படையில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக  எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈரோடு தினசரி மார்க்கெட் அமைந்துள்ள. பகுதியில் தினமும் காலையில் காய்கறிகள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியில் குப்பைகள் தேங்காதவாறு  ரத்னா ரெசிடென்சின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 

இணைந்து வீரபத்ரா மூன்றாவது வீதி முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டு அப்பகுதியை சுத்தமுள்ள பகுதியாக உருவாக்கினர். மேலும் சுவர்களில் வெள்ளை அடித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். இச்செயலைக் கண்ட அப்பகுதி மக்கள் ரத்னா ரெசிடென்சி நிறுவனத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


 பூபாலன் , தமிழக குரல் இணையதள செய்தியாளர்

No comments:

Post a Comment