ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அமைப்பின் சார்பில் கலைமகள் கல்வி நிலையம் நிதி உதவி தொடக்கப்பள்ளி
பனப்பாளையத்தில் சிறப்பு முகாம் துவக்க விழா நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு முகாம் துவக்க விழாவில் தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் நீலகண்டன் வரவேற்புரையை ஆற்ற, முதல்வர் விஜயகுமார் முன்னிலை வகிக்க, தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் இரா அசோக் தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அடிப்படை மக்கள் உரிமைகள் குரல் அகில இந்திய தலைமை இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன் மனித உரிமைகளும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விழிப்புணர்வு பற்றிய சிறப்புரை மாணவர்களிடையே ஆற்றினார் திருமாறன் சமூக அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசினை வழங்கினார் . மேலும் இந்நிகழ்வில் எல் ஐ சி கோவிந்தசாமி, தமிழக ஊடக மக்கள் சங்கம் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர் சங்கர், குணசேகரன் , பள்ளியில் ஆசிரியர் ஆசிரியர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றியுரை அ. பவுல்ராஜ் உதவி திட்ட அலுவலர், ரமேஷ் திட்ட அலுவலர் நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment