தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, டைபாய்டு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் சளி, காய்ச்சல் பாதிப்புடன் ஏராளமானோர் சிகிச்சை பெற வருகின்றனர். குறிப்பாக மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்
அறிகுறி கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களில் மட்டும் ஈரோடு மாநகராட்சி பகுதியில் நான்கு பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தற்போது சுகாதாரத் துறையினர் கண்காணிப்பில் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment