நவம்பர் 30 இல் ஜப்பானில் பாரதி விழா - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 November 2024

நவம்பர் 30 இல் ஜப்பானில் பாரதி விழா


நவம்பர் 30 இல் ஜப்பானில் பாரதி விழா மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஜப்பானில் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் பாரதி விழாவில் பேராசிரியர் ய. மணிகண்டன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது: மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் கிளை சார்பில் பாரதி விழாவும், உலக அறிவியல் நாள் விழாவும் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு (ஜப்பான் நேரப்படி மாலை 4 மணி) டோக்கியோ நகரில் உள்ள ஃபுனாபொரி டவர்ஹால் அரங்கில் நடைபெற உள்ளது. சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழித் துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன், ஐஎஸ்ஆர்ஓ முன்னாள் இயக்குநர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். பேராசிரியர் ய. மணிகண்டன் எழுதிய பாரதியும் ஜப்பானும் என்ற புதிய நூல் இந்நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் நா.நாகப்பன், பெருந்துறை தாலுக்கா.

No comments:

Post a Comment