ஈரோடு கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் 37 கடைகள் காலி செய்யப்பட்டது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்திடம், மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் கீழ், கனிமார்க்கெட் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தின், 3வது தளத்தில் உள்ள 80 கடைகளில், 78 கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளுக்கு தலா வைப்புத்தொகை ரூ. 50 ஆயிரம், மாத வாடகை ரூ. 3 ஆயிரம் (18 சதவீத ஜி.எஸ்.டி), ஜவுளி வியாபாரிகள் செலுத்தி வந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாடகையை திடீரென ரூ. 3,460 ஆக மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தியது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாநகராட்சி நிர்வாகத்திடம் வியாபாரிகள் பலமுறை மனு அளித்தும் வாடகை குறைக்கப்படவில்லை. இதனையடுத்து, 3வது தளத்தில் செயல்பட்டு வந்த 78 கடைகளில், 37 கடை வியாபாரிகள், கடைகளை காலி செய்து விட்டனர். இது தொடர்பான செய்தி நமது காலைக்கதிர் நாளிதழில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், 37 கடைகள் காலி செய்யப்பட்டது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்திடம், மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டிருப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.
No comments:
Post a Comment