ஈரோடு மாநகராட்சி கூட்டம் உரிய நேரத்தில் துவங்கப்படவில்லை எனக்கூறி அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அங்கு நிலவும் பிரச்சனைகள் மற்றும் புதிய திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு கூட்ட பொருட்கள் குறித்த விவாதம் தொடர்பான சாதாரண மாமன்ற கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று (நவம்பர் 27) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டரங்கிற்கு, அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டும் வந்த நிலையில், மேயர், துணை மேயர், ஆணையாளர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்க வரவில்லை. சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்த அதிமுக கவுன்சிலர்கள், உரிய நேரத்திற்கு கூட்டம் ஆரம்பிக்காததால் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மாமன்ற கூட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment