ஈரோடு மாவட்டத்தில் சுமார் 10,000 ஏக்கருக்கும் மேலாக பட்டுப்புழு உற்பத்திக்கான மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு பட்டுப்புழு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டுகளை விட தற்போது அதிக விலை கிடைப்பதாலும் நோயின் தாக்குதல் இல்லாததாலும் பட்டுப்புழு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த மே, ஜூன் மாதங்களில் தர்மபுரி, கர்நாடக மாநிலம் ராம் நகரில் கூட ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ. 450 முதல் ரூ. 525 வரை மட்டுமே இருந்தது. செப்டம்பரில் தரமான பட்டுக்கூடுகள் கிலோ ரூ.600 வரை விற்பனையானது. தற்போது மேலும் விலை உயர்ந்து ரூ. 600 முதல் ரூ.700 வரையிலான விலையில் விற்பனை ஆகின்றன. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் மல்பெரி புதிய நடவு ஏக்கருக்கு ரூ.25, 000, கொட்டகை அமைக்க ரூ. 2 லட்சம், தளவாட பொருட்கள் வாங்க ஒன்றரை லட்சம் உட்பட ரூ. 5 லட்சம் வரை அரசு மானியமாக வழங்குகிறது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட புதிய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் கோபி பகுதிக்கு மட்டுமே சிறப்பாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மல்பெரி சாகுபடி பரப்பு நடப்பு ஆண்டிலும், எதிர்வரும் ஆண்டிலும் உயரும் என எதிர்பார்க்கிறோம். தற்போது காலநிலை சீராக இருப்பதால் 100 மூட்டைகளுக்கு 90 கிலோ வரை பட்டுக்கூடு கிடைப்பதால் கூடுதல் லாபம் கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி தாலுக்கா.
No comments:
Post a Comment