ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
செங்குளம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு வழங்கினர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: - ஈங்கூர் ஊராட்சியின் 7-வது வார்டில் உள்ள செங்குளத்தில் இடுகாடு மற்றும் பெருந்துறை சிப்காட்டின் பசுமை வெளி பூங்காவிற்கு கீழ்புறம் உள்ள நத்தம் புறம்போக்கு நிலம் அறிந்து ஊராட்சி மன்ற நிர்வாகம் 18 ஊரில் உள்ள திடக்கழிவுகளையும் மற்றும் பாலிதீன், பேப்பர், மீன், கோழி மற்றும் மாமிச கழிவுகள், ஓட்டல் கழிவுகள், காய்கறி கழிவுகள் கொட்ட ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தப் பாதையில் தான் செங்குளத்தின் நீர் ஆதாரம், இரண்டு ஆட்கொழாய் கிணறுகளும் உள்ளன.
இதிலிருந்து தான் தினசரி 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்து 4800 டிடிஎஸ் அளவு குறைந்து கடந்த சில மாதங்களாக ஆயிரம் டிடிஎஸ் குறைந்துள்ளது. சிப்காட் நிர்வாகம் ஊரின் தெற்கு பகுதி மற்றும் வடமேற்கு பகுதியில் பசுமை வெளி பூங்கா அமைத்து மரங்கள் வளர்த்துக் கொண்டுள்ளது விரைவில் நல்ல காற்றும் கிடைக்க உள்ளது. இந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டினால் வியாதிகள் பரவ வாய்ப்புள்ளது. எனவே இந்த இடத்துக்கு வரும் குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் நா.நாகப்பன், பெருந்துரை தாலுக்கா.
No comments:
Post a Comment