ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊராட்சிக் கோட்டை பகுதியில் ரேஷன் அரிசியை விற்பனைக்காக கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 1,200 கிலோ ரேஷன் அரிசி விற்பனைக்காக கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் அந்தியூர் கேசரிமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் (41) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். சக்திவேலிடம் இருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி தாலுக்கா.
No comments:
Post a Comment