பூம்புகார் விற்பனை நிலையத்தில் விளக்குகள் விற்பனை கண்காட்சி : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 November 2024

பூம்புகார் விற்பனை நிலையத்தில் விளக்குகள் விற்பனை கண்காட்சி :



ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கைவினைக் கலைஞர்கள் தயாரிக்கும் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விளக்குகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது. நேற்று முதல் (28.11.2024) அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த சிறப்பு விற்பனை கண்காட்சியில், 4 அங்குலம் முதல் 6 அடி வரையிலான அன்னம் குத்து விளக்குகள், கிளி விளக்குகள், மலபார் விளக்குகள், பிரதோஷ விளக்குகள், குபேர விளக்குகள் என பல்வேறு வடிவிலான விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 15 ரூபாய் முதல் 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வரை விளக்குகள் உள்ளன. குறிப்பிட்ட விளக்குகளுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் அருண் தெரிவித்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment