ஈரோடு பாசூர் காந்தமலை ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சாமிகளுக்கு திருக்கல்யாண மஹோத்சவம் வைபவ நிகழ்ச்சியில் விநாயகர் வழிபாடு, புண்யாக வாஜனம், கலச ஸ்தானம், மூலமந்திர மாலாமந்திர யாகம், 108 வகையான த்ரவிய ஹோமம் மற்றும் விசேஷ பூஜைகள் சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீ பாலமுருகன் வள்ளி தெய்வானை சாமிகளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் பொதுமக்களும் பெண்களும் சஷ்டியின் முதல் நாளிலிருந்து ஏழு நாட்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்
சஷ்டி நாட்களில் விரதம் இருந்து வேண்டுதல் வைத்தால் தாங்கள் வைத்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்
திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருள்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்
No comments:
Post a Comment