ஈரோடு அடுத்த வள்ளிபுரத்தான் பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், முலாம் பழம் சாகுபடி செய்யும் பணியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
ஈரோடு அடுத்த வள்ளிபுரத்தான் பாளையம், முத்தாம்பாளையம், ரங்கம்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், முலாம் பழம் சாகுபடியை அப்பகுதி விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சாகுபடி செய்துள்ள முலாம் பிப்ரவரி மாதம் சந்தைக்கு வரும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கோடைக்காலம் மார்ச்சில் தொடங்கி விடும். இதனைக் கருத்தில் கொண்டு, முலாம் பழம் சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நெல்லில் கிடைக்கக் கூடிய வருவாய் போல், முலாம் பழம் சாகுபடி செய்வதிலும் கிடைக்கும். இந்த பழ சாகுபடியைப் பொறுத்தவரை, சொட்டு நீர் பாசனம் இருந்தால் போதும். பிப்ரவரி மாதம் அறுவடை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் மு. பிரகாஷ், கோபி தாலுகா.
No comments:
Post a Comment