கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் செங்கோடம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறைப்புரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸவரன், பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொங்கு மண்டலத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் சாய கழிவுகள் கலப்பட்டு வருவதால், கேன்சர் நோயை உற்பத்தி செய்யும் மாவட்டமாக உள்ளதாகவும், இந்த பிரச்சனைக்கு முழுமையான தீர்வை அரசு காண வேண்டும் என்றார். கள் இறக்குவதை அரசு தடுக்காமல் இருந்தாலே விவசாயிகளின் வருமானம் அதிகரித்து விடும் என்றும், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் காளிங்கராயன் பெயரை சேரக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோபியை தனி மாவட்டபிரிக்க அப்போதயை அமைச்சர்கே.ஏ. செங்கோட்டையன் தடையாக இருந்ததாகவும், தற்போதைய சூழலில் யாரும் அதற்கு எதிராக இல்லாததால் தனி மாவட்டத்தை உருவாக்க அரசுமுன்வர வேண்டும் என தெரிவித்தார்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் என பல கட்சிகள் கூறி வரும் நிலையில்,கொங்கு மண்டலத்தின் வளர்ச்சி திட்டங்களை தாமதப்படுத்த கூடாது என்பது தான் எனது பங்கு என்றும், கூறிய அவர், தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கைகள் வைத்து வருவதாக தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ. கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment