: மலை தேனீக்கள் கடித்து விவசாயி சாவு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 November 2024

: மலை தேனீக்கள் கடித்து விவசாயி சாவு :


மலை தேனீக்கள் கடித்து விவசாயி சாவு ஈரோடு அடுத்துள்ள முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கொழந்தசாமி (49). இவரது மனைவி பார்வதி (49). கொழந்தசாமிக்கு காஞ்சிக்கோயில் அருகில் சொந்தமாக 1.20 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. நேற்று அங்கு கொழந்தசாமி, பார்வதி மற்றும் வேலையாட்கள் 2 பேரும் சேர்ந்து, தென்னை மரத்துக்கு களைக்கொல்லி அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மதியம் 12:30 மணியளவில் தென்னை மரத்திலிருந்து மலை தேனீக்கள் கூடு கலைந்து கொழந்தசாமியையும், அவருடன் வேலை செய்து கொண்டிருந்த வெங்கடாஜலத்தையும் கடித்துவிட்டன. இதையடுத்து, கொழந்தசாமி, காஞ்சிக்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கொழந்தசாமி சிகிச்சை பலனின்றி மாலையில் உயிரிழந்தார். இது குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.

No comments:

Post a Comment