வாடகை கட்டிடங்களுக்கு மத்திய அரசு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்த இந்த புதிய வரி விதிப்பால் 63 லட்சம் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்படுவர்கள் எனவும், இதேபோல் தமிழக அரசு சொத்து வரி, குப்பை வரி மற்றும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் இன்று (நவம்பர் 29) ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
இதனையடுத்து திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, பிருந்தா வீதியிலுள்ள ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகள் அடைத்து வியாபாரிகள்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் மஞ்சள் மற்றும் ஜவுளிசந்தைகள் இயங்காது என்றும், இந்த கடையடைப்பு போராட்டத்தால் 100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். பேட்டியின் போது பொருளாளர் முருகானந்தம், இணை செயலாளர் ஜெபரி, இயக்குநர் சிவக்குமார் உள்பட பலர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் நா.நாகப்பன், பெருந்துரை தாலுக்கா.
No comments:
Post a Comment