நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சார்ந்த திருமதி ரா.ராகவி தினேஷ் அவர்கள் கடந்த நான்கு வருடங்களாக தாய்ப்பால் தானம் வழங்கி வருகிறார்கள்..
2020 முதல் தனது முதல் குழந்தை பிறந்தது முதல் இப்பொழுது இரண்டாவது குழந்தை இப்போது வரை பச்சிளம் குழந்தைகளுக்காக 17 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி பல உயிர்களை காப்பாற்றி குழந்தைகளின் தெய்வத்தாய் திருமதி ரா.ராகவி தினேஷ் அவர்களுக்கு யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் சார்பாக தாய்மையின் உயிர்த்துளி விருது 2024 வழங்கி கௌரவிக்கப்பட்டது...
நிகழ்வில் யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் நிறுவனர் புன்னகை தூரன் இரா.சங்கர், தலைவர் திரு ர.மோனிஷா, பொதுச்செயலாளர் திரு பூ.பிரவீனா, மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு மு.மாலினி ஆகியோர் கலந்து கொண்டு திருமதி ரா.ராகவி தினேஷ் அவர்களுக்கு சால்வை மெடல் அணிவித்து சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு (சீல்டு) வழங்கி அறக்கட்டளையின் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்
No comments:
Post a Comment